கடலூர் மாநாட்டிற்கு வாங்க... கரூர் மாதிரி நடக்காது.. பாதுகாப்பா அனுப்பி வைப்போம்: பிரேமலதா

Siva
செவ்வாய், 7 அக்டோபர் 2025 (08:23 IST)
கடலூரில் நடக்க இருக்கும் தேமுதிக மாநாட்டுக்கு அனைவரும் வாருங்கள், கரூர் மாதிரி எந்த விதமான அசம்பாவிதமும் நடக்காது, அனைவரையும் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில், கரூரில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பெரும் விபரீதம் ஏற்பட்டு 41 உயிர்கள் பலியான சம்பவம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில், கடலூரில் ஜனவரி 9ஆம் தேதி தேமுதிக மாநாடு நடக்க இருக்கும் நிலையில், அதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார்.
 
"கரூர் மாதிரி எந்தவித அசம்பாவிதமும் நடக்காது" என்றும், "உங்களை நாங்கள் உபசரித்து பாதுகாப்பாக கவனித்து வீடு சேரும் வரை அத்தனை வசதிகளும் செய்து தருவோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments