தமிழகம் சிறந்த மாநிலம்.. ஆனா ஊழல்வாதிகள் கைகளில்! - விஜய் வந்து விடுவிப்பார்! - பிரஷாந்த் கிஷோர்!

Prasanth Karthick
புதன், 26 பிப்ரவரி 2025 (12:34 IST)

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பேசிய அரசியல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர் தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விஜய் விடுவிப்பார் என பேசியுள்ளார்.

 

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பேசிய பிரஷாந்த் கிஷோர் “இந்தியா முழுவதும் சிறப்பான மாநில வளர்ச்சிக்கு உதாரணமாக குஜராத் மாடலை சொல்வார்கள். ஆனால் கட்டமைப்பில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலம் தமிழ்நாடுதான். ஆனால் இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளிடம் அது சிக்கிக் கொண்டிருக்கிறது.

 

தமிழ்நாட்டை காக்க CCD என்ற Corruption, Communalism, Dynasty ஆகியவை ஒழிக்கப்பட வேண்டும். ஊழல் அரசியல்வாதிகள் வெளியேற்றப்பட வேண்டும், வகுப்புவாதம் ஒழிக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட குடும்பம் அரசாள்வது நிறுத்தப்பட வேண்டும். 

சுனில் கவாஸ்கர் கிரிக்கெட்டில் பேமஸ். ஆனால் அவரது மகன் கிரிக்கெட்டுக்கு வரவில்லை. அதனால்தான் நமக்கு டெண்டுல்கர், தோனி போன்ற சிறந்த வீரர்கள் கிடைத்தார்கள். தோனிக்கு தமிழ்நாட்டில்தான் அதிகம் ரசிகர்கள் உள்ளனர். அதுபோல அரசியலிலும் குடும்ப அரசியல் இல்லாமல் ஆக வேண்டும்” என பேசியுள்ளார்.

 

மேலும் ”இந்த ஆண்டு இந்த விழாவில் பேசும் நான் அடுத்த ஆண்டு தவெக கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பிறகு உங்களுடன் தமிழில் பேசுவேன். அடுத்த வருடம் தல தோனி கோப்பை வெல்வார் என்றால் உங்கள் தளபதி ஆட்சியை வெல்வார். இன்னும் 100 நாட்களில் தவெகவில் நீங்கள் அனைவரும் குறைந்தது இரண்டு பேரையாவது சேர்க்க வேண்டும்” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் போட்டாவ வச்சி என் பொண்ணு வாழ்க்கையே போச்சி!.. அட பாவமே!...

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற ஒரு சாதாரண சந்திப்பு.. விஜய் சந்திப்பு குறித்து பிரவீன் சக்கரவர்த்தி

உபியில் 2.45 கோடி வாக்காளர் படிவங்கள் திரும்ப வரவில்லை.. SIRஆல் பாஜகவுக்கு சிக்கலா?

ஸ்விக்கி, ஸொமட்டோ டெலிவரி ஊழியர்கள் லிஃப்டை பயன்படுத்த கூடாது.. போர்டு வைத்து சிக்கலில் சிக்கிய ஓட்டல்..!

வெங்காயம் - பூண்டு சண்டையால் விவாகரத்து! 23 வருட திருமண உறவுக்கு முடிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments