விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியில் காளியம்மாள் இணைய போவதாகவும், சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய அவர், தவெகவின் இரண்டாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய போவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில், பிற கட்சிகளிலிருந்து வரும் பிரமுகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இதற்கான முயற்சியில் ஆதவ் அர்ஜுனா மற்றும் பிரசாந்த் கிஷோர் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் இருக்கும் அதிருப்தியாளர்கள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் சில பிரபலங்கள் இணைவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள், தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கிட்டத்தட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துவிட்டதாகவும், இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இது குறித்து காளியம்மாள் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.