Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்களும் வாங்க விஜய்.. உங்க கருத்துகளும் தேவை! - தவெகவுக்கு அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்!

Advertiesment
Stalin vijay

Prasanth Karthick

, புதன், 26 பிப்ரவரி 2025 (09:47 IST)

மத்திய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையரை குறித்து திமுக மேற்கொள்ள உள்ள அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய உள்ள நிலையில் இதனால் தமிழக தொகுதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவமும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். 

 

இந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாஜக, அதிமுக, பாமக உள்ளிட்ட எதிர்கட்சிகள் உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக தொடங்கப்பட்ட விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

கட்சி தொடங்கி இன்னும் தேர்தலை எதிர்கொள்ளாத நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதலமைச்சரிடம் இருந்து விடுக்கப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான முதல் அழைப்பு இது என்பதால் இதில் விஜய் கலந்து கொண்டு தனது கருத்துகளை சொல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அழைக்கப்பட்டுள்ள கட்சிகள்:
 

1.திராவிட முன்னேற்றக் கழகம்

2.இந்திய தேசிய காங்கிரஸ்

3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

4.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

5.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

6.மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

7.விடுதலை சிறுத்தைகள் கட்சி

8.மனிதநேய மக்கள் கட்சி

9.அகில இந்திய பார்வர்டு பிளாக்

10.தமிழக வாழ்வுரிமை கட்சி

11.மக்கள் நீதி மய்யம்

12.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

13.ஆதி தமிழர் பேரவை

14.முக்குலத்தோர் புலிப்படை

15.மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

16.மக்கள் விடுதலை கட்சி

17.அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

18.பாட்டாளி மக்கள் கட்சி

19.தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்)

20.தேசிய முற்போக்கு திராவிட கழகம்

21.அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

22.பாரதிய ஜனதா கட்சி

23.தமிழக வெற்றிக் கழகம்

24.நாம் தமிழர் கட்சி

25.புதிய தமிழகம்

26.புரட்சி பாரதம் கட்சி

27.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

28.புதிய நீதிக் கட்சி

29.இந்திய ஜனநாயகக் கட்சி

30.மனிதநேய ஜனநாயகக் கட்சி

31.இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி

32.இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்

33.பெருந்தலைவர் மக்கள் கட்சி

34.அனைத்து  இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்

35.பசும்பொன் தேசிய கழகம்

36.அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன்

37.தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி

38.கலப்பை மக்கள் இயக்கம்

39.பகுஜன் சமாஜ் கட்சி

40.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை

41.ஆம் ஆத்மி கட்சி

42.சமதா கட்சி

43.தமிழ்ப்புலிகள் கட்சி

44.கொங்கு இளைஞர் பேரவை

45.இந்திய குடியரசு கட்சி

 

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

48 மணி நேரத்தில் மரணம்.. வௌவ்வால் கறி தின்றதால் பரவும் புதிய நோய்! - ஆப்பிரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!