Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் பாஜக 20% வாக்குகளை பெறும், ஆனால்.. பிரசாந்த் கிஷோர்..!

தமிழ்நாட்டில் பாஜக 20% வாக்குகளை பெறும், ஆனால்.. பிரசாந்த் கிஷோர்..!

Siva

, ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (11:39 IST)
தமிழ்நாட்டில் பாஜக 20 சதவீத வாக்குகளை பெரும் என்றும் ஆனால் அதே நேரத்தில் அந்த கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

திமுக அதிமுகவுக்கு போட்டியாக பாரதிய ஜனதா கட்சி வளர்த்து வருவதாகவும் குறிப்பாக அண்ணாமலை நடைபயணத்துக்கு பிறகு பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் உயர்ந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தமிழக தேர்தல் நிலவரம் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தை பொருத்தவரை மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு 36 தொகுதிகள் கிடைக்கும் என்றும் அதிமுக கூட்டணிக்கு 2 தொகுதிகளும் பாஜக கூட்டணிக்கு 1 தொகுதியும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளார். ’

மேலும் திமுகவுக்கு 51.59 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு 20% வாக்குகள் கிடைக்கும் என்றும் அதிமுகவுக்கு 16 சதவீதமாக வாக்குகளே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

அதிமுக கூட்டணியை விட பாஜக கூட்டணிக்கு அதிக சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் 2026 தேர்தலில் இந்த வித்தியாசம் இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் இனி பாஜகவுக்கு தான்: விஜயதாரிணி