Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் இனி பாஜகவுக்கு தான்: விஜயதாரிணி

Advertiesment
இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் இனி பாஜகவுக்கு தான்: விஜயதாரிணி

Siva

, ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (11:32 IST)
நேற்று பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரிணி இனி இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் பாஜகவுக்கு தான் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரிணி நேற்று திடீரென டெல்லியில் பாஜகவில் இணைந்தார். அவரது வருகையால் தமிழக பாஜக புத்துணர்ச்சி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவில் இணைந்த பின் எம்எல்ஏ பதவி மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்த விஜயதாரிணி சற்று முன் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் முத்தலாக்கை தடை செய்ததன் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமையை மத்திய பாஜக அரசு நிலைநாட்டி உள்ளது என்று தெரிவித்தார். ஆனால் அதே நேரத்தில் இஸ்லாமிய பெண்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை பெற்று கொடுக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபடவே இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்

எனவே இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் இனி பாஜகவுக்கு தான் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் இஸ்லாமிய பெண்களுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் அவர் கூறினார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மலாலா மாதிரி நான் சொந்த நாட்டை விட்டு ஓடவில்லை: காஷ்மீர் பெண் பத்திரிகையாளர் உரை..!