Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீர் அரசியல்வாதி சுந்தர்.சி!.. விஜயை அடுத்து சுந்தர்.சி-யை கலாய்த்த பிரகாஷ்ராஜ்..

Advertiesment
sundar c
அதிமு- பாஜக கூட்டணியில் இருக்கும் புதிய நீதிக் கட்சியின் வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் இயக்குனர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து கடந்த பல நாட்களாகவே மதுரையில் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் சுந்தர்.சி. அந்த தொகுதியில் திமுக சார்பாக பி.டி ஆர் (பழனிவேல் தியாகராஜன்) போட்டியிடுகிறார்.

திடீரென அரசியல்வாதியாக மாறினாலும்  திமுக பற்றியும், பி.டி.ஆர். பழனியில் பற்றியும் முக்கியமான விமர்சனங்களை சுந்தர்.சி முன்வைத்து பேசி வருகிறார். அதேபோல், பிடிஆரின் விமர்சனங்களுக்கு ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல பதிலடியும் சுந்தர்.சி கொடுத்து வருகிறார்.

கடந்த இரண்டு தேர்தலாகவே மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்ற பி.டி.ஆர் அந்த தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என தொடர்ந்து சொல்லி வருகிறார் சுந்தர்.சி. இந்நிலையில், அந்த தொகுதியில் போட்டியிடும் பி.டி.ஆருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ்ராஜ் ‘சுந்தர்.சி திடீரென அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவர் வேட்பாளராக அறிவிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு வரை அவர் ஷூட்டிங் செய்து கொண்டிருந்தார்.. திடீரென அரசியலுக்கு வந்திருக்கிறார்.. நீங்கள் சினிமா இயக்குனர் ஆவதற்கு எவ்வளவு கற்றுக்கொண்டிருப்பீர்கள்?. அரசியலுக்கு மட்டும் எப்படி உடனே வருகிறீர்கள்?. அந்த புதிய நீதி கட்சி பாஜக கூட்டணியில் இருக்கிறது.. அந்த கட்சியின் கொள்கை என்ன? மதுரை மக்களின் பிரச்சினை என்ன? இதற்கு முன் சுந்தர்.சி எதையாவது பேசியிருக்கிறாரா?’ என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பினார்..

மேலும், குஷ்பு மூன்று கட்சிகளில் இருந்தார்.. அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.. ஆனால் அவரின் கணவர் சுந்தர்.சிக்கு கொடுத்திருக்கிறார்கள்.. அவருக்கு ஏதாவது இதில் புரியுமா?.. இந்த தேர்தல் திமுக, அதிமுகவுக்கும் இடையேயான போட்டி அல்ல, விஜய் செல்வது போல தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையேயான போட்டி அல்ல, ஒற்றுமைக்கும் வேற்றுமைக்கும் இடையே நடக்கும் தேர்தல்.. மக்கள் புரிந்து கொண்டு வாக்களியுங்கள்’ என அவர் பேசியிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு!. விஜய் திடீர் அறிவிப்பு..