திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில் இந்த இடைத்தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என அதிமுக எம்பி தம்பித்துரை வலியுறுத்தியுள்ளார்.
பொங்கல் நேரம் என்பதால் திருவாரூரில் தேர்தலை நடத்தக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து என்றும் தேர்தலை தள்ளி போடுவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்றும் பேட்டி ஒன்றில் தம்பிதுரை கேட்டுக்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த கருத்து தம்பிதுரை எம்பியின் சொந்த கருத்து என்றும், அதிமுகவின் கருத்து அல்ல என்றும் கூறப்படுகிறது.
மேலும் ஜனவரி 15ஆம் தேதி வரும் பொங்கல் திருவிழாவிற்கும், ஜனவரி 28ஆம் தேதி வரும் இடைத்தேர்தலுக்கும் இடையே இரண்டு வாரங்கள் இடைவெளி இருப்பதால், இடைத்தேர்தல் பொங்கல் பண்டிகையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று கூறப்படுகிறது. எனவே திட்டமிட்டபடி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன