Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 3 April 2025
webdunia

பிளாஸ்டிக் தடை எதிரொலி: மஞ்சப்பை, தூக்குவாளிக்கு மாறிய மக்கள்

Advertiesment
மஞ்சப்பை
, புதன், 2 ஜனவரி 2019 (07:41 IST)
நேற்று முதல் தமிழகத்தில் ஒருசில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்களும் வியாபாரிகளும் மஞ்சப்பைக்கு மாறி, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருவது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கேரிபேக் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பலர் மஞ்சப்பைக்கு மாறிவிட்டனர். காரிலும் டூவீலர்களிலும் செல்லும்போது உடன் மஞ்சப்பையை எடுத்து செல்வது நேற்று முதல் அரங்கேறியுள்ளது. அதேபோல் பார்சல் டீ வாங்குபவர்கள் தூக்குவாளியுடன் வருவதையும் பார்க்க முடிகிறது. மேலும் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.150 அட்வான்ஸ் பணம் பெற்றுக்கொண்டு தூக்குவாளி டீக்கடையிலேயே வழங்கப்படுகிறது. தூக்குவாளியை மீண்டும் கொடுத்துவிட்டு ரூ.150ஐ பெற்று கொள்ளலாம்

webdunia
அதேபோல் ஓட்டல்களில் சட்னி, சாம்பார் கட்டி கொடுக்க அலுமினியத்தால் ஆன கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. சென்னை உள்பட அனைத்து நகரங்களில் உள்ள ஓட்டல்களிலும் கேரிபேக்கிற்கு பதிலாக துணிப்பைகள் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு சட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக மாறிவிட்டது உண்மையிலேயே பெரும் மாற்றமாக கருதப்படுகிறது. இதே நிலை நீடித்தால் தமிழகம் சுற்றுச்சூழலை காப்பதில் முதலிடம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாத கருக்கலைப்பிற்கு நான் காரணமில்லை – கௌசல்யா விளக்கம்