Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போஸ்டர் ஒட்டினால் சிறை, அபராதம்.. ! மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை !

Advertiesment
போஸ்டர் ஒட்டினால்  சிறை, அபராதம்.. ! மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை !
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (17:24 IST)
சென்னை மாநகரில் தற்போது ஏராளான போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. ஆனாலும் நாளுக்கு நாள் மக்கள் தொகையில் அடர்த்தி அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. அதற்கேற பல மேம்பாலங்கள், சாலைகள்,ரயில் சேவைகளை அரசு ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் நமது சென்னை மாநகருக்கு அண்மையில் திறக்கபட்ட மெட்ரோ ரயில் பொதுமக்களின் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.
பயணத்திற்கு எளிதாகவும், சிரமமின்றி சாலைகள் போன்று இடையூறு இல்லாமல் சீக்கிரத்தில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல இந்த மெட்ரோ ரயில்சேவை உள்ளது.
 
இந்நிலையில் மெட்ரோ ரயில் தூண்களில் பல போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதனால் மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
அதில், சென்னை மெட்ரோ ரயில் நிலைய தூண்கள், கட்டடங்களில் போஸ்டர் ஒட்டினால் 6 மாதம் சிறைத்தண்டனை , ரூ 1000 அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபிரிட்ஜுக்குள் வைத்து பிணத்தை கடத்திய வேலைக்காரன்: டெல்லியில் பகீர்