Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலையில் எச்சில் துப்பிய இளைஞருக்கு தண்டனை ! வைரலாகும் வீடியோ

சாலையில் எச்சில் துப்பிய இளைஞருக்கு தண்டனை ! வைரலாகும் வீடியோ
, செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (14:53 IST)
கடந்த 02- 10 -14 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால்  தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவைக் காணவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் திட்டமாகவும் இது பார்க்கப்பட்டு மத்திய அரசால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
இதன் அடிப்படையில் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டுவது, சுகாதாரம் பேணுவது , கிராமத்திற்காம பொதுக்கழிவறை,நகர்ப்புறங்களில் கழிவறை, பள்ளி கல்லூரிகளில் கழிவறை, பெண்களுக்கான் தூய்மை பிரச்சாரம் போன்ற திட்டங்கள் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தூய்மை இந்தியா திட்டத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் விளம்பரதூதர்களாக இருக்கின்றனர்.
 
இந்த பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டு நாட்டில் சிறப்பான முன்னேற்றம் அடைந்திருக்கும் இந்தத்திட்டம் அனைந்து நாடுகளாலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுகிறது.
 
இந்நிலையில் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. குறிப்பாக குஜராத மாநிலத்தில் சூரத் நகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளில் சிசிடிவி கேமராக்களை வைத்து சாலைகளை யாரும் எச்சில், சிறுநீர், அசுத்தங்கள் செய்யதாவாறு கண்காணித்துவருகின்றனர். அப்படி செய்பவர்களை பிடித்து அபராதம் விதித்துவருகின்றனர். 
 
இதற்கிடையில் சூரத் நகராட்சியில் அத்வாலினிஸ் என்ற தெருவில் ஒரு இளைஞர் சாலையில் செல்லும் போது, சாலையில் எச்சில் துப்பியபடி சென்றார். அதைப் பார்த்த அதிகாரிகள் அவரை விரட்டிப் பிடித்து அபராதம் விதித்தனர். இளைஞன் தன்னிடம், பணமில்லை என்று கூறியதும், சாலையிலேயே மன்னிப்புக் கேட்டபடி தோப்புக்கரணம் போட வைத்தனர்.
 
இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது. அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை அங்கு பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரமே தெரியாது: பாஜகவை சந்தி சிரிக்க வைத்த சு.சுவாமி!