Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கே இந்த கேள்விக்கு விடை தெரியாது: தபால்துறை தேர்வு எழுதியவர்கள் பேட்டி

Webdunia
ஞாயிறு, 14 ஜூலை 2019 (18:50 IST)
தமிழ் மொழியில் கேள்வித்தாள் இல்லாததால் தபால் துறை தேர்வு கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
தபால் துறை தேர்வுகள் இன்று முடிவடைந்த நிலையில் இன்றைய தேர்வு மிகவும் கடினமாக இருந்ததாக இந்த தேர்வை எழுதியவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு சில கேள்விகளை அவர்கள் சுட்டிக் காட்டி இந்த கேள்விகளுக்கு பிரதமரே வந்தாலும் பதில் அளிக்க முடியாது என்று அவர்கள் கூறினர் 
 
மேலும் வினாத்தாளில் சில படங்கள் படங்கள் தெளிவு இல்லாமல் இருந்ததால் தங்களால் விடை எழுத முடியவில்லை என்றும், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டும் கேள்விகள் இருப்பதால் கேள்விகளை புரிந்துகொள்ள கடினமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர் 
 
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் தேர்வு என்பதை முன்கூட்டியே தெரிவித்து இருந்தால் நாங்கள் இந்தியை படித்துக்கொண்டு தேர்வுக்கு தயாராக இருப்போம் என்றும் கடைசி நேரத்தில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு என கூறியதால் குழப்பம் ஏற்பட்டதாகவும், தேர்வாளர்கள் தெரிவித்தனர் 
 
மேலும் இதே ரீதியில் சென்றால் தமிழகத்தில் ஹிந்தி தெரிந்தவர்கள் மட்டுமே வேலைக்கு சேர்ந்து டாமினேட் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ் தெரிந்தவர்கள் தங்களுக்கு தெரிந்த சொந்த வேலையை மட்டும் செய்யும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 குழந்தைகள் உள்பட 7 பேர் கொலை.. பெண்ணுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..!

பள்ளி மைதான ரெளடி போல் டிரம்ப் நடந்து கொள்கிறார்: சசிதரூர் விமர்சனம்..!

கமல்ஹாசனை அடுத்து பிரதமர் மோடியை சந்தித்த கனிமொழி.. தமிழக அரசியலில் பரபரப்பு..!

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments