Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பும்ரா ஸ்டைலில் பவுலிங் போடும் “பாட்டி”… உலகளவில் டிரெண்டாகிய 74 வயது பெண்மனி

Advertiesment
ஜஸ்பிரித் பும்ரா
, ஞாயிறு, 14 ஜூலை 2019 (15:59 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர், ஜஸ்ப்ரீத் பும்ராவின், ஸ்டைலில் பவுலிங் போடும் பாட்டியின் வீடியோ தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், 9 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். இவர் பவுலிங் போடும் ஸ்டைல் பல ரசிகர்களை ஈர்த்துள்ள நிலையில், தற்போது 74 வயது மதிக்கதக்க பெண்மனி ஒருவர் பும்ராவின் ஸ்டைலில் பவுலிங் போடும் விடியோ (ஜி.ஐ.எஃப்) ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இவரின் பெயர் சுகந்தம் என்றும், இவர் பும்ராவின் பந்து வீச்சால் பெரிதும்  கவரப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வீடியோவை பதிவேற்றிய இவரது மகளான மீரா என்பவரும் பந்து வீச்சாளர் பும்ராவின் வெறித்தனமான ரசிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சுகந்தம் பாட்டியின் பவுலிங் வீடியோ, உலக அளவில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி: உலகக் கோப்பையின் சூடு பிடிக்கும் கிளைமாக்ஸ் ஆரம்பம்