Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எய்ட்ஸ் பரவியது எப்படி – ஒரு மருத்துவரின் பார்வையில் -பகுதி 1

Advertiesment
கர்ப்பிணிப் பெண்ணுக்கு எய்ட்ஸ் பரவியது எப்படி – ஒரு மருத்துவரின் பார்வையில் -பகுதி 1
, வெள்ளி, 28 டிசம்பர் 2018 (11:17 IST)
சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவக் காலத்தின் போது தேவைப்படும் இரும்புச் சத்துக்காக ரத்தம் ஏற்றிய போது ஹெச்.ஐ.வி. பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது மருத்துவ நிலையங்கள் அவ்வளவு கவனக்குறைவாக இருக்கின்றனவா என்றக் கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு எவ்வாறு ஹெச்.ஐ.வி. பரவியிருக்கலாம் என சிவகங்கையைச் சேர்ந்த மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தனது முகநூலில் விளக்கம் அளித்துள்ளார்.

ஃபரூக் அப்துல்லாவின் முகநூல் பதிவு :-
தமிழகத்தில் 24 வயது உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.முதலில் இந்த விபத்தில் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான அந்த பெண்ணுக்கு அனுதாபங்களை பதிவு செய்தவனாய் அந்த பெண்ணிற்கு அரசு தக்க இழப்பீடு வழங்க வேண்டியவனாகவும் இந்த விளக்கப் பதவிவை ஆரம்பிக்கிறேன்.

பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கர்ப்ப காலத்தில் ஏற்படும் ரத்த சோகை நோயை சரிசெய்யும் பொருட்டு ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது.பொதுவாக கர்ப்ப காலத்தில் ரத்த சோகை ஏற்படுவது இந்திய பெண்களை பொருத்தவரை வாடிக்கையான ஒன்று.
webdunia

கர்ப்பினிப் பெண்களுக்கான ரத்தசோகைப் பிரச்சனைகள்
முதல் மூன்று மாதங்களுக்கு பிறகு கர்ப்பிணிகள் அனைவருக்கும் இந்த ரத்த சோகையை தடுக்கும் பொருட்டு இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றனஇருப்பினும் அடுத்த மூன்று மாதங்களில் ரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு அயன் சுக்ரோஸ்(Iron sucrose) எனும் திரவம் நரம்பு வழியாக ஏற்றப்பட்டு இரும்புச்சத்து அதிகரிக்கப்படும்.

இதில் கடைசி மூன்று மாதங்களில் இருக்கும் கர்ப்பிணகளுக்கு ரத்த சோகை மிக அதிகமாக இருந்தால் அவர்களுக்கு ரத்தம் ஏற்றப்படுகிறதுகடைசி மூன்று மாதமான 3rd trimester இல் இரும்புச்சத்து மாத்திரைகளோ திரவம் மூலம் ஏற்றப்படும் அயன் சுக்ரோஸோ பயன்தராது.ஆகவே அத்தகைய இரும்புச்சத்து குறைந்த ரத்த சோகை உள்ள கர்ப்பிணிகளுக்கு ரத்தம் ஏற்றப்படுவது அவர்களுக்கு தரப்படவேண்டிய சிகிச்சை.எனவே இது அத்தியாவசிய சிகிச்சை என்ற அளவில் அந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு யூனிட் ரத்தம் - டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்றப்பட்டது.ஏற்றப்பட்ட அந்த ரத்தமானது அதற்கு நான்கு தினங்களுக்கு முன்பு நவம்பர் 30 ஆம் தேதி தன்னார்வல தொண்டு நிறுவனம் நடத்திய ரத்த தான முகாம் மூலம் ஒருவர் வழங்கிய ரத்தம்.
webdunia

ரத்ததானம் தேவைப்படும் சிகிச்சைகள்

பொதுவாக எவற்றுக்கெல்லாம் ரத்தம் தேவைப்படுகிறது என்பதை பார்ப்போம்?
1. சாலை விபத்துகளில் அடிபட்டு அதிக ரத்தப்போக்குக்கு உள்ளானவர்களுக்கு
2. ரத்தப்புற்றுநோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ரத்தம் ஏற்றப்பட வேண்டும்
3. தீவிர ரத்த சோகை (severe anemia)
4. பெரிய அறுவை சிகிச்சைகளுக்கு பின் அந்த அறுவை சிகிச்சை மூலம் வீணான ரத்தத்தை ஈடு செய்ய ஏற்றப்படும் (Perioperative blood loss) இவ்வாறு பல்வேறு காரணங்களுக்கு தேவைப்படும் ரத்தமானது

தொண்டு நிறுவனங்கள் , ரத்த வங்கிகள் இவற்றில் தன்னார்வத்துடன் ரத்தத்தை தர விரும்பும் கொடையாளர்களிடம் (Donors ) இருந்து பெறப்படுகிறது.குருதி கொடை தரவும் பல விசயங்களை பூர்த்தி செய்தாக வேண்டும் குருதி தருபவருக்கு வயது 18 க்கு மேல் இருத்தல் வேண்டும் நல்ல உடல் எடையுடன் ஆரோக்கியமானவராக இருத்தல் வேண்டும். அவருக்கு வேறெதுவும் தொற்றும் மற்றும் தொற்றா நோய்கள் இருத்தல் கூடாது. அவரது ரத்த ஹீமோகுளோபின் அளவு சரியானதாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் தரலாம். நாள்தோறும் தேவைப்படுவோர்க்கு தேவையான ரத்த யூனிட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சாலை விபத்துகள் அதிகமாகின்றன.. அறுவை சிகிச்சைகளுக்கு ரத்தத் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே ரத்த தான முகாம்கள் ஆங்காங்கு நடந்து கொண்டே இருக்கின்றன. இதுபோன்ற ஒரு ரத்த தான முகாமில் தான் 21 வயதுடைய நபர் - நவம்பர் 30 ஆம் தேதி ரத்தம் கொடையாக தந்துள்ளார்.

பரிசோதனை விவரங்கள்

இப்படி கொடையாக வாங்கப்படும் உதிரமானது மற்றவருக்கு ஏற்றப்படுவதற்கு முன்பு  கட்டாய பரிசோதனைகளுக்கு பின்பு ஏற்றப்படுகிறது. என்னென்ன பரிசோதனைகள் செய்யப் படுகின்றன ? முக்கியமான பரிசோதனை "Cross Matching" எனப்படும் பரிசோதனை. அதாவது கொடை வாங்கப்பட்ட இந்த ரத்தம் எந்த ரத்த வகையை சேர்ந்தது ?  மற்றும் ரத்தம் ஏற்றப்படப்போகும் குருதி பெறுபவரின் ரத்த வகை எது? இது இரண்டும் ஒத்துப்போகிறதா என்ற சோதனை.. இந்த சோதனை அனைத்து ரத்த யூனிட்களுக்கும் செய்யப்படுகின்றன.

மீதி பகுதி இரண்டில்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் அழகிரி? கனிமொழியின் பரபரப்பு விளக்கம்