Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனிதனால் வெல்ல முடியாத ஒரு நோய்!- உலக எய்ட்ஸ் தினம்

மனிதனால் வெல்ல முடியாத ஒரு நோய்!- உலக எய்ட்ஸ் தினம்
, சனி, 1 டிசம்பர் 2018 (14:10 IST)
உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 1) ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மனித இனம் உருவான காலத்தில் இருந்தே பல நோய்களை, உயிர்க்கொல்லிகளை எதிர்த்து போராடி பலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளான். ஆனால் மனிதனால் இன்னும் வெல்ல முடியாத சில விஷயங்களும் உலகில் இருக்கவே செய்கின்றன. அவற்றில் முக்கியமானதும் அச்சுறுத்தகூடியதுமான முதல் விஷயம் என்ன தெரியுமா?. எய்ட்ஸ்...

முதன் முதலில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.

எய்ட்ஸ் நோய் மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தாக்கி முழுவதுமாக பலமிழக்க செய்வதால் அதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. ஆனால் முழுமையான தீர்வுதான் கண்டுபிடிக்கப்பட வில்லையே தவிர, இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டகாலம் மருந்துகளின் உதவியால் ஆரோக்யமாக வாழ்வதற்கான வழியினை நவீன அறிவியல் கொடுத்துள்ளது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ளாத பட்சத்திலேயே எய்ட்ஸின் கிளைநோய்களான காசநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரிக்கிறது.

உலகம் முழுவதும் இதுவரை 35 மில்லியன் பேரைக் கொன்றுள்ள இந்த கொடிய நோய்க்கெதிராக மனித இனம் தனது முழுமூச்சோடுப் போராடி வருகிறது. ஒருநாள் மனிதன் இந்நோயை வெல்வான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிரியர் அடித்ததால் மனம் உடைந்த மாணவன் தற்கொலையா...?