பிரபல யூட்யூபர்களான கோபி, சுதாகர் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் திருநெல்வேலியில் கவின் என்ற ஐடி இளைஞர் தனது சகோதரியை காதலித்து வந்ததால், சுர்ஜித் என்ற இளைஞர் அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சுர்ஜித் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பிரபல யூட்யூபர்களான கோபி, சுதாகர் தங்களது பரிதாபங்கள் சேனலில் சொசைட்டி பரிதாபங்கள் என்ற வீடியோவை வெளியிட்டனர். அதில் சாதிய ரீதியாக நடக்கும் தற்கால சம்பவங்களை அவர்கள் கிண்டல் செய்து வீடியோ வெளியிட்டிருந்தனர்.
தற்போது கோபி, சுதாகர் மீது கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் தனுஷ்கோடி என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் நெல்லையில் இரு குடும்பங்கள் இடையே ஏற்பட மோதலை இரு சமூகத்தின் மோதலாக கோபி, சுதாகர் சித்தரிப்பதுடன், சமூகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக வீடியோ வெளியிட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார்.
கோபி, சுதாகரின் சொசைட்டி பரிதாபங்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வரும் நிலையில் இந்த புகார் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K