Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு போலீஸார் அபராதம்

ttf vasan
, வியாழன், 15 ஜூன் 2023 (21:12 IST)
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு   மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

சமீபத்தில், யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து அவர் மீது சூலூர்  மற்றும் போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், மதுக்கரை நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் விடுவிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, கடலூர் புதுப்பாளையம் பகுதியில் சினிமா இயக்குனர் செந்திலின் அலுவலகத்தை திறப்புக்காக  டிடிஎஃப் வாசன் வந்தார். அவரைக் காண மக்கள் குவிந்தனர். , அப்பகுதியில் போக்குவரத்திற்கும்  பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் யூடியூபர் டிடிஎஃப் வாசன் மற்றும் 3 பேர்  மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவ்வப்போது சர்ச்சைக்குரிய வீடியோக்கள் பதிவிடுவது, அதிவேகத்தில் பைக் ஓட்டுவது போன்ற சர்ச்சைகளில் சிக்கி வரும் டிடிஎஃப் வாசன் இன்று  அதிவேகத்தில் சென்றதற்காக போலீஸார் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

உதகையில் அதிக வேகமாகச் சென்றதற்காக அவரை மடக்கிப் பிடித்த போலீஸார் அவருக்கு ரு.1000 அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிபர்ஜாய் புயலின் பெயரை குழந்தைக்குச் சூட்டிய தம்பதி