பூம்புகார் அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி!
தமிழகத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் இதில் ஒருசிலர் அமைச்சர்களும் அடங்குவர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் சற்றுமுன் நடிகர், எம்.எல்.ஏ கருணாஸ் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. பவுன்ராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சற்றுமுன் செய்திகள் வெளியாகியது. இதனையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிகிறது
இன்று ஒரே நாளில் இரண்டு தமிழக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.