குடியரசு தின அணி வகுப்பில் தமிழர் ஊர்தி செல்வது தமிழர்களுக்கு மட்டும் பெருமையில்லை, இந்தியாவிற்கே பெருமை என பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி.
இந்திய சுதந்திரப் போராட்ட வீராங்கனை ராணி வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோரது உருவங்களைக் கொண்ட தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தினர்.
பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இந்த விவகாரம் தொடர்பாக பேசியதாவது, குடியரசு தின அணி வகுப்பில் தமிழர் ஊர்தி செல்வது தமிழர்களுக்கு மட்டும் பெருமையில்லை, இந்தியாவிற்கே பெருமை. தமிழர் ஊர்தி செல்வது நல்லது, அது அனுமதிக்கப்பட வேண்டும். தமிழர் ஊர்தியை ஒதுக்கி வைப்பதால் பிரதமர் நரேந்திர மோடிக்கு யாரும் கிரீடம் வைக்கப் போவதில்லை. தமிழரின் பெருமையை பேசுவதில் நரேந்திர மோடியை போன்று வேறு எந்த பிரதமரும் இருந்ததில்லை என்று குறிப்பிட்டார்.