Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி - நாராயணசாமி

Advertiesment
எச்.ராஜா தரமில்லாத அரசியல்வாதி - நாராயணசாமி
, வியாழன், 19 ஏப்ரல் 2018 (16:40 IST)
திமுக தலவவர் கருணாநிதியையும், அவரது மகள் கனிமொழியையும் கீழ்த்தரமாக விமர்சித்த எச்.ராஜா ஒரு தரமில்லாத அரசியல்வாதி என புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

 
 
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதை அடுத்து எச்.ராஜா டுவிட்டரில், தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்களா எனப் பதிவிட்டிருந்தார்.
 
ஹெச்.ராஜாவின் இந்த கருத்து திமுகவினரை கொந்தளிக்க செய்தது. இது மிகவும் கீழ்த்தரமான பதிவு என அவருக்கு எதிராக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்தனர். மேலும், #எச்சபொறுக்கிராஜா என்கிற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் அவரை வறுத்தெடுத்தனர்.
webdunia
 
இந்த நிலையில் எச்.ராஜவின் இந்த கருத்து குறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் ஒரு தரமில்லாத அரசியல்வாதி, தனிப்பட்ட முறையில் மற்ற அரசியல் தலைவர்களை கீழ்தரமாக விமர்சித்து அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என நினைக்கிறார் என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா?