Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து பற்றி தமிழிசை டிவிட்...

Advertiesment
ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து பற்றி தமிழிசை டிவிட்...
, புதன், 18 ஏப்ரல் 2018 (17:54 IST)
நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகை அடிபட்டிருப்பதால் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 

 
ஹெச். ராஜா  தனது டிவிட்டர் பக்கத்தில் “தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே” எனப் பதிவிட்டிருந்தார்
 
ஹெச்.ராஜாவின் இந்த பதிவு திமுகவினரை கொந்தளிக்க செய்துள்ளது. இது மிகவும் கீழ்த்தரமான பதிவு என அவருக்கு எதிராக பலரும் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், #எச்சபொறுக்கிராஜா என்கிற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். பலரும் இதை பயன்படுத்தியதில், டிவிட்டரில் இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங்கில் இடம் பெற்றது.
 
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் “பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்த கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையை தருகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியே திரும்பிப் போ - லண்டனிலும் தமிழர்கள் போராட்டம்