Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் பொன்வண்ணனுக்கு போன் செய்த முதல்வர்… ஏன் தெரியுமா?

Advertiesment
நடிகர் பொன்வண்ணனுக்கு போன் செய்த முதல்வர்… ஏன் தெரியுமா?
, வியாழன், 16 செப்டம்பர் 2021 (11:28 IST)
நடிகர் பொன்வண்ணன் சிறந்த அரசியல் விமர்சகரும் ஓவியரும் கூட என்பது பலரும் அறியாதது.

சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. அந்த கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் 39 நிமிடங்கள் தன் துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்தது கடந்த 10 ஆண்டுகளில் நடக்காதது. இந்நிலையில் சிறப்பாக கூட்டத்தொடரை நடத்தி முடித்த ஸ்டாலினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பொன்வண்ணன், முதல்வர் ஸ்டாலினின் ஓவியத்தை வரைந்து ‘ஆரோக்கியமான அரசியல் முன்னெடுப்பு... விவாதங்கள்... மக்கள் நல அறிவிப்புகள்... என நம்பிக்கையுடன் நிறைவடைந்த சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு வாழ்த்துகள்.’ எனத் தெரிவித்திருந்தார். இது முதல்வரின் கவனத்துக்கு சென்ற நிலையில் பொன்வண்ணனை தொலைபேசியில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

அதுகுறித்து பொன்வண்ணன் வெளியிட்ட செய்தியில் ‘முதல்வர் இல்லத்திலிருந்து எனக்கு அழைப்பு... தொடர்பில் வந்த முதல்வர் எனது ஓவியத்தை பாராட்டியதோடு, நம்பிக்கைக் கொண்ட வரிகளுக்கு நன்றியும் தெரிவித்தது மகிழ்வின் உச்சம்’ எனப் பாராட்டியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவில்களில் மூன்று வேளையும் அன்னதானம்! – தொடங்கி வைத்தார் முதல்வர்!