Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறங்கி அடிக்குமா பாஜக? பொன்னார் சூசக பதில்!

Webdunia
புதன், 11 டிசம்பர் 2019 (12:59 IST)
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி தொடருமா இல்லையா என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். 
 
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அமமுக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தயாராகி வருகின்றனர்.  
 
அதேபோல ரஜினி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என் அறிவித்தது. 
 
இந்நிலையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அதிமுக கூட்டணியில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்று கேட்கப்பட்டது.
 
இதற்கு மாவட்ட வாரியாக பேசி முடிவெடுத்து பின்னர் இது குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் தலைமை முடிவெடுக்கும் என கூறிவந்தவர் தற்போது வேறு பதில் அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments