Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை தமிழ் இந்துக்களுக்கு மசோதாவில் எதுவும் இல்லை!! சிவசேனா எம்.பி. குற்றச்சாட்டு

Arun Prasath
புதன், 11 டிசம்பர் 2019 (12:37 IST)
குடியுரிமை தடுப்பு சட்டத்திருத்த மசோதாவில் இலங்கை தமிழ் ஹிந்துக்களுக்கு என்று எதுவுமே இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றசாட்டு

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் குடிபெயர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை தரும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

அதன் படி 3 நாடுகளிலிருந்து இந்தியாவில் அகதிகளாக குடிபெற்ற இந்துக்கள், கிறுஸ்துவர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்ஸி, சீக்கியர்கள் ஆகிய 6 மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த சட்டம் குடியுரிமை அளிக்க அனுமதிக்கும். மேலும் இச்சட்டப்படி அகதிகளாக குடியேறும் இந்த 6 மதத்தவர்களும் 6 ஆண்டுகள் இங்கு வசித்திருக்க வேண்டும் என்பது விதியாகும். முன்னதாக விதிப்படி 11 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 5 ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் இஸ்லாமியர்களும், இலங்கை தமிழர்களும் சேர்க்கப்படவில்லை என்பதால் காங்கிரஸ், திமுக மற்றும் பல அரசியல் தலைவர்களும், அமைப்புகளும் இச்சட்டத் திருத்தத்தை கைவிடுமாறு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை மசோதாவில் இலங்கைய சேர்ந்த தமிழ் இந்துகளுக்கு என்று எதுவும் இல்லை என்றும், குடியுரிமை மசோதா மூலம் வாக்கு வங்கியில் ஈடுபடுவது சரியானது இல்லை என்றும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு அளித்தது. இது குறித்து மஹாராஷ்டிராவின் சிவசேனா தலைவரும், முதல்வருமான உத்தவ் தாக்கரே, “இந்து மதத்தை சேர்ந்த அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதால் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு அளித்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments