Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை காவிமயமாக்க பாஜக முயற்சிக்கவில்லை - பொன்னார் பொளேர்!

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (16:32 IST)
ரஜினியை காவிமயமாக்க பாஜக முயற்சிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார். 
 
சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகம் அமைந்துள்ளது. இதன் புதிய அலுவலகத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலை திறக்கப்பட்டது. இச்சிலையை நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் திறந்துவைத்தனர்.  
 
இந்த விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பாஜக தரப்பில் இருந்து யாரும் என்னை வந்து அனுகவில்லை.  திருவள்ளுவருக்கு காவி பூசியது போல எனக்கும் காவி பூச பார்க்கிறார்கள்; திருவள்ளுவரும் மாட்ட மாட்டார், நானும் மாட்ட மாட்டேன் என பேசியிருந்தார். 
 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ரஜினியை காவிமயமாக்க பாஜக முயற்சிக்கவில்லை. நான் கட்சிக்கு அப்பாற்பட்டு வேறு எந்த மாற்று சிந்தனையுமின்றி ரஜினிகாந்த் என்ற நல்ல மனிதனுக்கு தலைசிறந்த விருது கிடைத்தபோது பாராட்டத்தான் அவரை சந்தித்தேன் என தெரிவித்துள்ளார். 
 
இதேபோல, ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments