Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் இன்றே ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மனால் பரபரப்பு

Advertiesment
விஜய் இன்றே ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மனால் பரபரப்பு
, திங்கள், 10 பிப்ரவரி 2020 (09:32 IST)
வருமானத் துறை அதிகாரிகள் கடந்த வாரம் விஜய் வீட்டில் அதிரடியாக ரெய்டு செய்தனர் என்பது தெரிந்ததே. இரண்டு நாட்கள் விஜய் வீட்டில் ரெய்டு செய்த அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் பிகில் படத்தில் அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு? வருமான வரி அலுவலகத்தில் தெரிவித்த கணக்கு எவ்வளவு? என்பது குறித்து விசாரணை செய்ததாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து வருமானவரித்துறை சோதனை முடிந்து கடந்த இரண்டு நாட்களாக நெய்வேலியில் நடைபெற்ற ஒரு ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் அதிரடியாக வருமானவரி அலுவலகத்தில் இன்று விஜய் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த சம்மனை ஏற்று இன்று விஜய் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இன்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் நடக்காது என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் மட்டுமின்றி ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடலில் சிக்கிய அபூர்வ எலிப்பூச்சி! – சமைத்து சாப்பிட்ட மீனவர்!