Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தல் நாளில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. வேலூரில் பரபரப்பு

Advertiesment
தேர்தல் நாளில் அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டி கொலை.. வேலூரில் பரபரப்பு
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (14:04 IST)
வேலூரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், அதிமுக பிரமுகர் கொடூரமாக வெட்டிக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மாட்டு வண்டித் தொழிலாளி ஆவார். இவர் இந்த பகுதி அதிமுக பிரமுகரில் மிகவும் பிரபலமானவர். மேலும் அதிமுக-வில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்.

இந்நிலையில் இன்று காலை, சேண்பாக்கம் தேவாலயம் அருகே சேகர் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்த சில மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த சுத்தி, அரிவாள் ஆகிய ஆயுதங்களால் சேகரை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். இதில் பலத்த காயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
webdunia

இது குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சேகரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது சம்பந்தமாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று வேலூரில் பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பிரமுகர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமர்ஜென்சி இல்ல அர்ஜென்சி... வெங்கய்யா வாயடைத்தும் ஆவேசத்தில் வெடித்த வைகோ!!