Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் :விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத ’வாட்ஸ் அப்’ நிறுவனம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் :விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத ’வாட்ஸ் அப்’  நிறுவனம்
, புதன், 24 ஏப்ரல் 2019 (20:26 IST)
பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு வாட்ஸ் அப் நிருவனம் சரியாக ஒத்துழைக்கவில்லை என காவல்துறையினர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் மணிவண்ணன் என்பவர் போலீஸாரிடம் சரணடைந்தார்.
 
அதிமுக பிரமுகர் இதில் சம்மந்தப்பட்டிருப்பதால் அதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என்றும் சம்மந்தப் பட்டவர்களை அதிமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
 
மேலும் சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான குரல்கள் வலுவாக எழ ஆரம்பித்தன.
 
இதனையடுத்து இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளான  5பேரை கைது செய்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் இன்று கணொளி காட்சி மூலம் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது காவல்துறை. இதனையடுத்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்னன் ஆகியோரின் நீதிமன்ற காவலலை வரும் மே 6 ஆம் தேதிவரைக்கும் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 
 
இந்நிலையில் விசாரணையின் போது காவல்துறையினருக்கு வாட்ஸ் அப் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்தனர். 
 
இதற்கு நீதிபதிகள் கூறியதாவது:

மத்திய அரசுக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்காத வாட்ஸப் டுவிட்டர் நிறுவனத்துக்கு ஏன் தடைசெய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பினர். மேலும் அனைத்து சமூக வலைதளங்கள்  விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்காதது ஏன் என்பது பற்றி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமமுகவுக்கு பரிசுப்பெட்டி சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு