Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெலிவரி பாய் பாலியல் அத்துமீறல்: கூப்பன் கொடுத்து சரிகட்டிய ஸ்விக்கி

Advertiesment
டெலிவரி பாய் பாலியல் அத்துமீறல்: கூப்பன் கொடுத்து சரிகட்டிய ஸ்விக்கி
, திங்கள், 1 ஏப்ரல் 2019 (19:07 IST)
பெங்களூருவில் ஸ்விக்கி டெலிவரி பாய் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்த பெண் புகார் அளித்தார். ஆனால், ஸ்விக்கி அதற்கு நடவடிக்கையாக செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
உணவுகளை ஆன்லைன் ஆடரின் பெயரில் டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிவருவது வாடிக்கையாகி வருகிறது. ஆனால், இந்த முறை பாலியல் புகார் ஒன்றில் சிக்கியுள்ளது. 
 
ஆம், பெங்களூரில் பெண் ஒருவரிடம் ஸ்விக்கி டெலிவரி பாய் உணவை கொடுத்துவிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து அந்த பெண் தனது பேஸ்புக பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 
 
ஸ்விக்கி டெலிவரி பாய் என்னிடம் ஏதோ கூறினான். அது எனக்கு புரியவில்லை. எனவே, நான் மீண்டும் என்ன என்று கேட்டபோது, என்னிடம் அவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான். 
webdunia
உடனே உணவை அவனிடமிருந்து பிடுங்கிக்கொண்டு கதவை சாத்திவிட்டேன். பின்னர், இந்த சம்பவம் குறித்து ஸ்விக்கி நிறுவனத்தின் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு முறையிட்டேன். 
 
இது போன்ற அசம்பாவித சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட ஸ்விக்கி நிறுவனம், சிறிது நேரத்தில் நடந்த சம்பவத்துக்கு இழப்பீடாக ரூ.200 கூப்பன் ஒன்றை அனுப்பியது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என குறிப்பிட்டுள்ளார். 
 
இதையடுத்து மீண்டும் ஸ்விக்கி நிறுவனம் அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமண நாளன்று வாந்தி: சந்தேகத்தில் கன்னித்தன்மை சோதனை செய்த கணவன்