’அரசியலில் ’ ஹிட் அடிப்பாரா நடிகர் விஜய் ? ரசிகர்கள் ஆர்வம்

செவ்வாய், 2 ஜூலை 2019 (14:33 IST)
தமிழ் சினிமாவில் உட்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். அவரது படங்கள்  சினிமா ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெறும். படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வசூலை வாரிக்கொடுக்கும். சமீபகாலமாலவே அவரது படங்களில் அரசியல் அனல் பறக்கும் வசனங்கள் அதிகளவு இடம் பெற்றன. இதனால் நடிகர் விஜயின் ஆஸ்தான ரசிகர்கள் அனைவரும் அவரது அரசியல் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.
சமீபத்தில் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஒரு போஸ்டர் ஒட்டியிருந்தனர் . அது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில், ’பேரறிஞர்’ அண்ணாவின் ஆட்சியை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் இந்த அண்ணாவில் ஆட்சியை எதிர்பார்க்கிறோம் என்று எழுதி தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர்.
 
இதனையடுத்து அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பழ கருப்பையா, அக்கட்ட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவில் இணைந்தார். விஜய் நடிப்பில் வெளியான ஒரு அரசியல் படத்திலும் அவர் நடித்திருந்தார். அவர் நடிகர் விஜய் குறித்து கூறியதாவது : நான் விஜய்யிடன் அரசியலுக்கு வரும் ஆர்வம் உள்ளதா என்று கேட்டேன்..அதற்கு அவர் : மக்களுக்கு எதாவது செய்யனும்ங்ணா என்று சொன்னதாகத் தெரிவித்தார்.
 
அதன்பிறகு சர்க்கார் பட ஆடியோ விழாவில் விஜய் பேசிய பேச்சு, தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகளிடையே கலக்கத்தை உண்டுபண்ணியது.அவரது மேடை பேச்சும் திட்டமிட்ட  ஒன்றாகவே அரசியல் விமர்சகர்களாள் பார்க்கப்பட்டது. ஆனால் படம் ரிலிஸ் அன்று ஏற்பட்ட பல சர்ச்சைகள் , பிரச்சனைகள், முருகதாஸ் மீதான திருட்டுக்கதை பிரச்சனைகள் உள்ளிட்ட எல்லாமே அவருக்கு தெரியும் என்றாலும் அது குறித்து அவர் கருத்து தெரிவிக்காதது வேடிக்கையாக இருந்தது. குறிப்பாக படம் ரிலீஸாகி அவரது ரசிகர்கள் அடித்துக்கொண்டு இருந்தபோது, விஜய் சர்க்கார் வெற்றியை கேக் வெட்டி  விழா கொண்டாடியதாகவும் அவர் மீது பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
 
இந்நிலையில் தற்போது பிரமாண்ட இயக்குநர் சங்கர் இயக்கும் முதல்வன் -2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் சர்கார் படத்தில் முதல்வர் பதவியை தட்டிக்கழித்த விஜய் , ஷங்கர் இயக்கும் முதல்வன் - 2 படத்தில் முதல்வர் கதாப்பாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. தற்போது விஜய் அட்லி இயக்கத்தில் ’பிகிலு’ என்ற படத்தில் நடித்துவருகிறார்.
 
இந்நிலையில் ரசிகர்கள் என்ன நினைத்தாலும், ஊடகங்கள் என்ன செய்திகள் வெளியிட்டாலும் ஷங்கர் படத்தில் விஜய் நடிப்பதும் , அரசியலில் காலூன்றுவதும் நடிகர்  விஜயின் கையில்தான் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஸ்டெர்லைட் மூடப்பட்டதால் காப்பருக்கு தட்டுபாடு: அமைச்சர் தங்கமணி