தமிழை இந்தியாவின் ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என வடமாநிலங்களில் அரசியல் பிரமுகர்கள் கூறி வரும் நிலையில் தமிழகத்தில் அதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி இந்தியாவின் ஆட்சி மொழி என பேசியுள்ளார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமுக பொதுசெயலாளர் வைகோ “இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் அளித்துவிடக் கூடாது. மிகவும் பழமையான மொழியான தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.