Publish Date: Fri, 14 May 2021 (09:30 IST)
Updated Date: Fri, 14 May 2021 (09:48 IST)
ஊரடங்கை மீறுவோர் மீது இன்று முதல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா 2 ஆம் அலை இந்தியா முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் முழு ஊரடங்கை மக்கள் பலர் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. எனவே, இன்று முதல் அத்தியவசியப் பணிகள் தவிர்த்து தேவையின்றி வெளியில் வாகனங்களில் வரும் மற்றும் நடமாடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.