ஜிஆர்டி நிறுவனம் ரூ1 கோடி, திருமாவளவன் ரூ.10 லட்சம்: குவியும் கொரோனா நிதி
தமிழகமே கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸை எதிர்கொள்ள அதிக செலவினங்கள் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்
அதுமட்டுமின்றி வெளிநாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர்களும் நிதி வழங்க வேண்டும் என்றும் அவர்களுடைய பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்பட பலர் நிதிகளை குவித்து வருகின்றனர்
குறிப்பாக ஜோஹோ நிறுவனம் 5 கோடி ரூபாய், சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி ரூபாய், உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம் ரூபாய், ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாய், என நிதியை கொடுத்துள்ளனர் என்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் ஜிஆர்டி குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் ஜிஆர் அனந்த பத்மநாபன் மற்றும் ஜி.ஆர்ராமகிருஷ்ணன் அவர்கள் நேரில் சந்தித்து ரூபாய் 5 கோடிக்கான காசோலையை வழங்கினார்கள். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.