Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைக் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

பைக் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்
, திங்கள், 1 ஏப்ரல் 2019 (09:27 IST)
சென்னை தலைமை செயலகம் அருகே காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதிக்கு ரோந்துக்கு வந்த ஒரு போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்கிய ஒரு போலீஸ், அங்கு நின்றிருந்த பைக்கை தனது கையில் வைத்திருந்த தடியால் அடித்து சேதமடைந்தார். இதனை இன்னொரு அதிகாரியும் பார்த்து கொண்டிருந்தார்.
 
அப்போது அந்த சமயத்தில் வந்த பைக் உரிமையாளரை திட்டியதோடு, தொடர்ந்து அவர் கண்முன்னே பைக்கை தடியால் அடித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அந்த போலீஸ் மீது கடும் கண்டனங்கள் வைக்கப்பட்டன. மக்களின் சொத்து ஒன்றை சேதப்படுத்த போலீசாருக்கு என்ன உரிமை உள்ளது? என்று சமூக வலைத்தள பயனாளிகள் கேள்வி எழுப்பினர். நோ பார்க்கிங் பகுதியில் பைக் நிறுத்தப்பட்டிருந்தால் அபராதம் விதிக்க மட்டுமே போலீசாருக்கு உரிமை உள்ளதாகவும் குரல் ஓங்கி ஒலித்தது.
 
webdunia
இந்த நிலையில் சென்னை காமராஜர் சாலையில் போர் நினைவுச் சென்னம் அருகே இருசக்கர வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் ஹரிபாபு மற்றும் காவர் மோகன் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிபாபு, காவர் மோகன் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்ப்பித்துள்ளார்,. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தின் இறுதி நொடிகள் - வெளியான ரகசியம்