Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் அருகே தி.மு.க வினர் அராஜகம்: கொலை வெறித்தாக்குதல்

கரூர் அருகே தி.மு.க வினர் அராஜகம்: கொலை வெறித்தாக்குதல்
, சனி, 30 மார்ச் 2019 (18:11 IST)
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆரத்தி தேவையா என்று முழக்கமிட்டவர்கள் மீது திமுகவினர்  கொலை வெறித்தாக்குதல் நடத்தியதில் இருவர் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மக்களவையின் தி.மு.க கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆங்காங்கே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசநத்தம், ஆண்டிப்பட்டி கோட்டை, லிங்கமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்குகள் சேகரித்த போது தி.மு.க வினர் சிலர் ஆரத்தி எடுத்து வரவேற்ற நிலையில் அதிமுக தொண்டர் திருமூர்த்தி உள்ளிட்ட சிலர் என்பவர் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு ஆரத்தி தேவையா என்று கூறி கோஷமிட்டனர். அப்போது திமுக மற்றும் மதிமுக நிர்வாகிகள் கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர், 
 
இந்நிலையில், பெரியசாமி என்கின்ற வாலிபர் செந்தில் பாலாஜியை பார்த்து அதிமுக விற்கு வாக்குகள் கேட்கின்றீர்களா ? தி.மு.க விற்கு வாக்குகள் கேட்கின்றீர்களா ? என்றதோடு, ஏற்கனவே செந்தில்பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வாக ஜெயித்து நன்றி சொல்ல கூடவரவில்லை என்று கூறியதற்கு அவருக்கும் தர்ம அடி மற்றும் கொலை வெறித்தாக்குதல் நடத்தபட்டது, இவர்கள் இருவரும் கவலைக்கிடமான நிலையில் கரூர் அரசு மருத்துவகல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் நிருபர்களின் செல்போன்களை பறித்து, எதற்காக நாங்கள் அடிப்பதை எடுக்கின்றீர்கள் என்று கேமிராக்களையும் பிடுங்கி அதில் பதிவேற்றம் செய்திருந்த ஒளிப்பதிவுகளை அழித்ததோடு, செய்தியாளர்களுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டது. 
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரபிற்குள்ளானது. இந்நிலையில் இதையெல்லாம் கவனித்த தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியும் அந்த அடிதடிகளை கண்டு ரசித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி வாக்காளர்களிடையே பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.
 
சி.ஆனந்தகுமார் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு தேர்தலை நடத்தவிடாமல் செய்ய சதி: தம்பிதுரை