Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையை தீவிரமாக தேடும் போலீஸார்: சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (09:41 IST)
சென்னை பெருங்குடியில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் தலையை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு பையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அங்கிருந்தவர்கள் இதுகுறித்து புகார் அளிக்க போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் போலீஸார் குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறி வந்தனர்.
 
இந்நிலையில் இரண்டு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீஸார் அந்த பெண்ணின் கணவரை சுற்றி வளைத்தனர். அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா ஆவார். இவரின் கணவர் சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார். போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். மனைவி மீதான சந்தேக புத்தியே இந்த கொலைக்கான காரணம் என தெரிகிறது.
 
சந்தியாவின் உடல் பாகங்கள் மற்றும் தலையை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸார் இன்று சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை, கொலை செய்பவர்களுக்கு மரண தண்டனை: டொனால்ட் டிரம்ப்..!

சபரிமலையில் நாளை மண்டல பூஜை: பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்..!

இன்று வலுவிழக்கிறது காற்றழுத்த தாழ்வு பகுதி ; தென் மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார்: டி.டி.வி.தினகரன் அதிரடி அறிவிப்பு..!

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments