இன்னும் இரண்டு நாட்களில் புதுவருடம் பிறக்க இருக்கும் நிலையில் நட்சத்திர ஹோட்டல்களில் புதுவருடக் கொண்டாட்டம் நடத்த கெடுபிடிகளை போலிஸார் விதித்துள்ளனர்.
புத்தாண்டு இந்தியாவின் அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படும் ஒரு நாளாக உள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு இளைஞர்கள் புதுவருடத்தை பல வழிகளில் கொண்டாடி வருகின்றனர். ஆனால் அந்த கொண்டாட்டங்களில் நிறைய அசம்பாவிதங்கள் நடப்பதால் இளைஞர்களைக் கட்டுப்படுத்த போலிஸார் தீவிரமாக உள்ளனர். பைக்ரேஸ், கடலில் குளிப்பது போன்ற நடவடிக்கைகளை தடுக்க 15000 போலிஸார் நியமிக்கபப்ட்டுள்ளனர்.
நட்சத்திர ஹோட்டல்களில் நடக்கும் பார்ட்டிகளுக்கும் காவலர்கள் கெடுபிடி விதித்துள்ளனர். அதன் படி ‘இரவு ஒரு மணிக்குள் அனைத்துக் கொண்டாட்டங்களும் முடிக்கப்பட வேண்டும். பெண்களை பாதுகாக்க பெண் பவுன்சர்கள் நியமிக்கப்படவேண்டும். நீச்சல் குளங்களுக்கு செல்லும் பகுதிகள் அடைக்கப்பட்டு இருக்க வேண்டும்’ எனப் பல விதிமுறைகளை விடுத்துள்ளனர்.