Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கனிமொழி எம்.பி., வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: என்ன காரணம்?

Advertiesment
kanimozhi
, ஞாயிறு, 27 நவம்பர் 2022 (15:47 IST)
திமுக எம்பி கனிமொழி வீட்டிற்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
திமுக எம்பி கனிமொழியின் தூத்துக்குடி வீட்டில் மர்ம நபர் ஒருவர் புகுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கனிமொழி அலுவலக தரப்பினர் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் மர்ம நபர் குறித்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
 
 இந்தநிலையில் தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்பி வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
மேலும் கனிமொழி வீட்டில் புகுந்த மர்ம நபர் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் விளையாட்டில் பணம் இழப்பு: இளம்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை!