Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டுக்கு தப்ப ராஜேந்திரபாலாஜி ப்ளான்? லுக் அவுட் நோட்டீஸ் வழங்க போலீஸ் தீவிரம்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (08:25 IST)
பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் ராஜேந்திரபாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தவிர்க்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்த விவகாரத்தில் தேடப்பட்டு வருகிறார். அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு காத்திருப்பில் உள்ளது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்லும் வாய்ப்பு உள்ளதாக போலீஸ் கருதும் நிலையில் அவர் வேறு நாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவது குறித்து காவல்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜேந்திரபாலாஜி மீதான இந்த துரத்தல் நடவடிக்கை அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது என அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments