பொம்மை துப்பாக்கியை காட்டி குழந்தை வன்கொடுமை! – கணவனை பிடித்துக் கொடுத்த மனைவி!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (12:24 IST)
சிவகங்கையில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி குழந்தையை வன்கொடுமை செய்த நபரை அவரது மனைவியே போலீஸில் பிடித்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசித்து வருபவர் பாலாஜி. மதுரை ஐ.ஜி அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தனது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் இவரது நண்பர் ஒருவரின் 7 வயது மகள் அடிக்கடி பாலாஜி வீட்டிற்கு விளையாட வந்துள்ளார். அப்போது அந்த சிறுமியிடம் பொம்மை துப்பாக்கி ஒன்றை காட்டி அதை வைத்து சிறுமியின் பெற்றோரை கொன்று விடுவதாக பாலாஜி மிரட்டியுள்ளார்.

அதை உண்மை என்று நம்பிய குழந்தை பாலாஜி சொல்வதை கேட்பதாக சொல்ல அவர் அந்த குழந்தையை அடிக்கடி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். சமீபத்தில் இந்த விஷயத்தை சிறுமி தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அக்கம்பக்கத்தினரோடு சேர்ந்து பாலாஜியை அடித்து துவைத்துள்ளனர். அவரை தப்பி விடாமல் பிடித்து அறை ஒன்றில் அடைத்த அவரது மனைவி, அவரே காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு பாலாஜியை பிடித்தும் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments