Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வருஷம் கழிச்சு முதல் தடவையா பாதிப்பு! – லட்சத்தீவில் கொரோனா!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (11:53 IST)
கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி ஒரு ஆண்டுகாலம் ஆகிவிட்ட சூழலில் தற்போது முதன்முறையாக லட்சத்தீவில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டின் இறுதி வாக்கில் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டுக்கும் மேலாகி விட்ட நிலையில் தற்போது உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பரவிவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா 2.0 கண்டறியப்பட்டுள்ளதால் கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வந்தாலும் லட்ச தீவில் இதுவரை ஒரு கொரோனா பாதிப்பு கூட பதிவாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3ம் தேதி கோவாவிலிருந்து லட்சத்தீவு பயணித்த ஒருவருக்கு முதன்முறையாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அவரை தனிமைப்படுத்தியுள்ள லட்சத்தீவு அரசு, கோவாவிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments