Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் பதுங்கியுள்ள ராஜேந்திர பாலாஜி..? – விரைந்தது தனிப்படை!

Webdunia
புதன், 29 டிசம்பர் 2021 (11:39 IST)
பண மோசடி வழக்கில் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திரபாலாஜி. அப்போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.3 கோடி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ராஜேந்திரபாலாஜியை தனிப்படை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் சாத்தூரை சேர்ந்த நபருக்கு சத்துணவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா, பெங்களூரில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜேந்திரபாலாஜி டெல்லியில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை டெல்லி விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதிகள் துறவி போல் வாழ வேண்டும், சமூக ஊடகத்தில் கருத்து சொல்ல கூடாது: சுப்ரீம் கோர்ட்

ஒரே நாளில் 1200 புள்ளிகள் சரிந்து 843 புள்ளிகள் உயர்ந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் ஆச்சரியம்..!

பிரியங்கா காந்தியின் முதல் பாராளுமன்ற உரை.. என்ன பேசினார்..!

சபரிமலையில் தொடர் கனமழை.. பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்க தடையா?

அடுத்த கட்டுரையில்
Show comments