சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர கட்டுப்பாடு அறிவித்திருந்தது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணியிலிருந்து 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. சென்னையில் மட்டும் நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.