குடிக்க காசு இல்லாத்தால் ஏடிஎம்-ஐ உடைக்க முயன்ற வாலிபர் – கைகொடுத்த சிசிடிவி !

புதன், 23 அக்டோபர் 2019 (11:03 IST)
சென்னையை அடுத்து உள்ள பம்மல் பகுதியில் குடிக்க காசு இல்லை என்பதற்காக ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பல்லாவரத்தை அடுத்து பம்மல் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் ஒன்றில் நுழைந்த வாலிபர் ஒருவர் பணம் எடுப்பது போல் எந்திரத்தை உடைத்துப் பணத்தை திருட முயன்றுள்ளார். ஆனால் அலார்ம் அடிக்க ஆரம்பித்ததால் அவர் அங்கிருந்து ஓடி தலைமறைவானார். அலார்ம் அடித்ததால் ஏடிஎம்-ஐ சுற்றி மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதையடுத்து மும்பை தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த சிசிடிவி காட்சிகளை கொடுத்து சென்னை அதிகாரிகள் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த காட்சிகளை வைத்து ஏடிஎம்-க்கு அருகில் உள்ள பகுதிகளில் விசாரணை நடத்திய போலிஸார் உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த அருள்மணி என்பவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குடிக்க காசு இல்லாததால் ஏடிஎம்-ஐ உடைக்க முயன்றததாக அவர் ஒத்துக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கள்ளக்காதலிக்கு இன்னொரு காதலனா ? – காதலன் நச்சரிப்பால் நடந்த கொலை !