Publish Date: Tue, 28 Jan 2020 (16:37 IST)
Updated Date: Tue, 28 Jan 2020 (16:41 IST)
திருமணத்தில் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டிய மாப்பிள்ளையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவேற்காடு பகுதியில் புவனேஷ் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. அவர் பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் ரூட் தல என அறியப்படுகிறார். ஆதலால் இத்திருமணத்தில் பச்சையப்பன் கல்லூரியில் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இத்திருமணத்தை கொண்டாட விழாவிற்கு வந்த மாணவர்கள் 3 அடி பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டினர். மேலும் ஒரு மாணவன் பட்டக்கத்தியோடு நடனம் ஆடினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் திருவேற்காடு போலீஸார், மாமியார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றிருந்த புதுமாப்பிள்ளை புவனேஷை கைது செய்துள்ளனர்.