அரசு வேலை வாங்கி தருவதாக மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன என்பதையும் தலைமறைவாக இருந்து இருக்கும் ராஜேந்திரபாலாஜியை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்கள் வசந்தகுமார் மற்றும் ரமணன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அது மட்டுமின்றி ராஜேந்திர பாலாஜியின் கார் ஓட்டனர் ராஜ் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இருக்கும் காவல் துறையினர் மிக விரைவில் அவரை கைது செய்வார்கள் என்று கூறப்படுகிறது