Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்? – மளிகைக்கடைகாரர் கைது!

Advertiesment
girl abuse
, ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (12:10 IST)
பொள்ளாச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த மளிகைக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவிகள் பலர் படித்து வருகின்றனர். அந்த பள்ளி தலைமை ஆசிரியர் சமீபத்தில் மாணவிகளுக்கு குட் டச், பேட் டச் குறித்து சொல்லிக் கொடுத்துள்ளார்.

அப்போது மாணவிகளிடம் சந்தேகங்களை கேட்க சொல்லி தெளிவுப்படுத்தியும் உள்ளார். அப்போது 13 வயது மாணவி ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் மளிகைக்கடை வைத்துள்ள நபர் தான் கடைக்கு போகும்போதெல்லாம் சில இடங்களில் தொட்டு பேசுவது குறித்து கூறியுள்ளார்.


அதை தொடர்ந்து மேலும் பல சிறுமிகளும் அதே மளிகைக்கடைக்காரர் தங்களையும் அவ்வாறு பல இடங்களில் தொட்டு, தடவி பேசியதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மளிகைக்கடைக்காரர் நடராஜனை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளியலறையில் கேமரா.. விடுதி மாணவி பரப்பிய வீடியோ! – மாணவிகள் தற்கொலை முயற்சி?