Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (07:07 IST)
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் இந்த வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் திருடு போயிருந்த நகைகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் வட்டாரம் தெரிவிக்கின்றது
 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
மேலும் இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கில் மேலும் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments