சென்னையில் அருகே விஷவாயு கசிவு: 13 ஊழியர்கள் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி..!

Siva
வெள்ளி, 12 ஜனவரி 2024 (07:30 IST)
சென்னை அருகே பெருங்குடியில் தனியார் வங்கியில்  இரவு நேர பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென ஏசியிலிருந்து விஷவாயு கசிந்ததாகவும் இதனை அடுத்து 13 ஊழியர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்  அந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏசியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத வாயு கசிந்ததாகவும் இந்த வாயு கசிந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஊழியர்கள் நலமுடன் இருப்பதாகவும் இன்று அல்லது நாளை அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments