Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் 'அயலகத் தமிழர் தினம் 2024’-ஐ தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

Advertiesment
ayalan

Sinoj

, வியாழன், 11 ஜனவரி 2024 (16:54 IST)
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ள ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ஐ சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''உலகெங்கும் வாழும் தமிழர்களை கொண்டாடும் விதமாக கழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஏற்பாடு செய்துள்ள ‘அயலகத் தமிழர் தினம் 2024’-ஐ சென்னையில் இன்று தொடங்கி வைத்தோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உயிராக நேசித்த ‘தமிழ் வெல்லும்’ என்ற சொல்லை கருப்பொருளாக கொண்டு நடைபெறும் இந்த 2 நாள் நிகழ்வில், 50-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் இருந்து அமைச்சர்கள் - நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் - தொழில்முனைவோர்கள் என அயலகத்தமிழர்கள் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.

உலகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாக தி.மு.கழக அரசு என்றும் திகழும் என தாய்த்தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள அயலகத் தமிழர்களிடையே உரையாற்றினோம். “அயலகத் தமிழர் தினம் - 2024” சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தோம்''என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் நேரடியாக இந்திய வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தலாம்!